Friday 17th of May 2024 12:07:24 PM GMT

LANGUAGE - TAMIL
ஜனாதிபதி தேர்தல் நாளை - சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

ஜனாதிபதி தேர்தல் நாளை - சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!


பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குச் சீட்டுக்கள் மற்றும் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று கொண்டு செல்லப்படவுள்ளன.

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை 1கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

12 ஆயிரத்து 815 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

நாளை காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியும்.

தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை வாக்களிப்பிற்காக பயன்படுத்த முடியும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமது பெயர், வாக்காளர் பெயர் பட்டியலில் இருக்குமாயின் அவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் உட்பட ஏனைய ஆவணங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று முற்பகலில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. இவற்றுடன் அதிகாரி ஒருவரும் செல்லவுள்ளார்.

உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் இணைந்துகொண்டுள்ளனர். தென்னாபிரிக்க மனித உரிமைகள் அமைப்பு, இந்தோனேசியா, இந்தியா, மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் கண்காணிப்புப் பணியில் இணைந்துகொண்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கண்காணிப்பாளர் நேற்று பணியில் இணைந்துகொண்டனர். அவர்கள் குறித்த மாவட்டங்களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களைச் சந்தித்தும் கலந்துரையாடினர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE